/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்பு மத்தியில் திறந்த நிலை கிணறு
/
குடியிருப்பு மத்தியில் திறந்த நிலை கிணறு
ADDED : ஜூலை 07, 2025 07:12 AM

சிவகாசி : சிவகாசி அருகே எரிச்சநத்தம் கணேஷ் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த நிலையில் உள்ள கிணற்றினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கிணற்றை மூட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம் கணேஷ் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த கிணறு தற்போது பயன்பாட்டில் இல்லாத நிலையில் குப்பை கிடங்காக மாறிவிட்டது.
இப்பகுதியின் கழிவுநீரும் கிணற்றில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியினர் தொற்றுநோயாலும் பாதிக்கப்படுகின்றனர். ரோட்டோரத்தில் திறந்த நிலையில் உள்ள இந்த கிணற்றில் 10 மாதங்களுக்கு முன்பு ஒருவர் தவறி விழுந்து இறந்தார். ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளும் உள்ளே தவறி விழுந்து இறந்துள்ளது.
கிணற்றின் அருகில் சிறுவர்கள் விபரீதம் அறியாமல் விளையாடுகின்றனர். ரோட்டில் மிக அருகில் கிணறு இருப்பதால் சிறிது கவனம் சிதறினாலும் கிணற்றுக்குள் விழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாக கிணற்றை மூட வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.