/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறந்த வெளி கிணற்றால் விபத்து அபாயம்
/
திறந்த வெளி கிணற்றால் விபத்து அபாயம்
ADDED : ஜன 13, 2025 06:18 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே கொத்தனேரியில் இருந்து எரிச்சநத்தம் செல்லும் ரோட்டில் தடுப்புகள் இல்லாமல் ரோடு மட்டத்திற்கு திறந்த வெளியில் கிணறு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கிணற்றில் தண்ணீர் நிரம்பி உள்ளது. ஆனால் கிணற்றில் தடுப்புகள் இன்றி இருக்கின்றது.
இவ்வழியாக இரவில் செல்பவர்கள் வளைவு பகுதியில் இருப்பதை அறியாமல் வேகமாக சென்றால் கிணற்றிற்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டில் மின் விளக்குகள் இல்லாததால் விபத்து நடந்தால் தெரிவதற்கு கூட விடிந்தால் தான் தெரியும் என்ற நிலையே நீடிக்கிறது.
இதனால் இரவு நேரத்தில் மக்கள் ரோடு வழியாக செல்வதற்கே அஞ்சுகின்றனர். எனவே கொத்தனேரியில் இருந்து எரிச்சநத்தம் செல்லும் ரோட்டின் அருகே செயல்படாமல் இருந்து அபாயத்தை ஏற்படும் திறந்த வெளி கிணற்றை மண்ணை கொட்டி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.