நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் பயணிகள் நிழற்குடை பல ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில், நகராட்சி மூலம் 15 லட்சம் செலவில் நவீன பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் இதைத் திறந்து வைத்தார்.
நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் பங்கேற்றார். உடன் நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, கமிஷனர் ராஜமாணிக்கம், முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

