ADDED : நவ 15, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கஞ்ச நாயக்கன்பட்டியில் 17.19 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் திறப்புவிழா, சுக்கிலநத்தம் கிராமத்தில் 10 லட்சம் நிதியில் ரேஷன் கடை அடிக்கல் நாட்டு விழா, 12.80 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா,
டி.மீனாட்சிபுரத்தில் 8 லட்சம் நிதியில் பயணியர் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா, ஆமணக்குநத்தத்தில் 21 லட்சம் நிதியில் புதிய பைப் லைன் அடிக்கல் நாட்டு விழா, 8 லட்சம் நிதியில் பயணியர் நிழற்குடை அடிக்கல் நாட்டு விழா, குருந்தமடத்தில் 14 லட்சம் நிதியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.