/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
ADDED : டிச 31, 2024 04:17 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தன.
மாவட்டத்தில் கடந்தாண்டு 40 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இந்தாண்டு அறுவடை முடிந்து தயார் நிலையில் இருக்கும் சூழலில் டிச. 26 வரை கொள்முதல் நிலையம் திறக்காமல் இருந்தது.
மேலும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய தேசிய கூட்டுறவு நுகர்வோர் பெடரேஷனின் தனியார் ஏஜன்சி மூலம் கொள்முதல் செய்யப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இம்முடிவு ஏற்கதக்கதல்ல என விவசாயிகள் எதிர்த்தனர். என்.சி.சி.எப்.,ன் ஏஜென்சியின் தனியார் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற மாநில அரசின் நிர்பந்தம் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் தயங்கி வந்தது. இதனால் முன்பு நடந்த அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களை போன்று செயல்படுத்த வேண்டும் என கோரி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து தினமலர் நாளிதழில் டிச.27ல் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக 40ல் அறுவடை முடிந்து தேவைப்படும் 27 கொள்முதல் நிலையங்கள் அரசு சார்பில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.