ADDED : ஜூலை 30, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகரில் ரயில்வே பீடர் ரோட்டில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தின் தற்காலிக கட்டடம் திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் லெட்சமி நாராயணன் வாழ்த்தினர். முன்னாள் மாவட்டச் செயலாளர் பால்சாமி கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் ராஜன் நன்றிக் கூறினார்.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற மாவட்ட துணைத் தலைவர்களான நகராட்சி வருவாய் உதவியாளரான முத்துராமலிங்கம், கூட்டுறவு சார்பதிவாளர் மாரியப்பன் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.