ADDED : ஜூலை 11, 2025 03:04 AM

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் புதுப்பிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கம், கருத்தரங்க கூடம் திறப்பு விழா நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் வரவேற்றார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள் குணசிங், பல்லவி துவக்கி வைத்தனர்.
ஹட்சன் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனர்பத்மஸ்ரீ சந்திரமோகன் குத்துவிளக்கேற்றி பேசுகையில், மாற்றுச் சிந்தனையே மாற்றத்திற்கு வழி வகுக்கும். இதுவே தொழில் முனைவிற்கான சிறந்த உத்தி, என்றார்.
தொடர்ந்து கல்லுாரியின் வளர்ந்து வரும் சுய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடினார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் செய்தனர்.

