/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடியிருப்புகளுக்குள் சோலார் டவர் அமைக்க எதிர்ப்பு
/
குடியிருப்புகளுக்குள் சோலார் டவர் அமைக்க எதிர்ப்பு
குடியிருப்புகளுக்குள் சோலார் டவர் அமைக்க எதிர்ப்பு
குடியிருப்புகளுக்குள் சோலார் டவர் அமைக்க எதிர்ப்பு
ADDED : டிச 22, 2024 07:33 AM

காரியாபட்டி : காரியாபட்டி மீனாட்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சோலார் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்யப் போவதாக கூறி பஞ்சவர்ணம் 42, டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அவரை போலீசார், தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
காரியாபட்டி கடமங்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பாக சோலார் மின் உற்பத்தி செய்து, ஆவியூர் உப மின் நிலையத்திற்கு சப்ளை செய்யப்படுகிறது. இப்பகுதி வளம் பாதிக்கப்படுவதாக கூறி ஏற்கனவே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு நிறுவனம் சார்பில் அப்பகுதியில் சோலார் மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்பட்டு ஆவியூர் உப மின் நிலையத்திற்கு வழங்க மின் பாதைக்கான டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காரியாபட்டி மீனாட்சிபுரத்தில் நான்கு வழிச்சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் மின் டவர் அமைக்கப்பட்டு வருவதற்கு, அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மின் பாதைக்கான டவரை மாற்றி அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனை பொருட்படுத்தாமல் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம் நேற்று காலை டவரில் ஏறி தற்கொலை செய்யப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆவியர் போலீசார், காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள் சமாதானம் பேசி நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவித்து, அவரை மீட்டனர்.