/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓரம்போ... ஓரம்போ... நகராட்சி வண்டி வருது
/
ஓரம்போ... ஓரம்போ... நகராட்சி வண்டி வருது
ADDED : செப் 20, 2024 06:20 AM

விருதுநகர்: விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் விநியோக வாகனம் பழுது ஏற்பட்டு கல்லுாரி ரோட்டில் நின்றது. இந்த வாகனத்தை கல்லுாரி மாணவர்கள், மக்கள் சேர்ந்து தள்ளிச் சென்று ஓரமாக நிறுத்தினர்.
விருதுநகர் நகராட்சிக்கு சொந்தமாக கல்லுாரி ரோட்டில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் இருந்து நகராட்சி டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் இருந்து நீரை நிரப்புவதற்காக வந்த வாகனம் பழுது ஏற்பட்டு நகர முடியாமல் கல்லுாரி ரோட்டில் நடு வழியில் நின்றது.
இந்த வாகனத்தை கல்லுாரி மாணவர்கள், அவ்வழியாக சென்றவர்கள் தள்ளிச் சென்று ரோட்டின் ஓரமாக நிறுத்தினர். இது போன்று நகராட்சி வாகனங்கள் பழுதாவது தொடர் கதையாக மாறியுள்ளது.
நகராட்சி பகுதியில் ஏற்கனவே 7 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை போக்குவதற்காகவும், தேவையான பகுதிகளுக்கு உடனடியாக வழங்குவதற்காகவும் செயல்பாட்டில் உள்ள டேங்கர் வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பது கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தற்போது வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.