/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்ட ஆணை
/
மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்ட ஆணை
ADDED : ஏப் 21, 2025 05:24 AM
நரிக்குடி: வீடின்றி தவித்த மாற்று திறனாளிக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆணை வழங்கினார்.
நரிக்குடி நல்லுக்குறிச்சியை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தனுஷ்கோடி. திருமணமாகி ஒரு ஆண், பெண் பிள்ளைகள் உள்ளனர். மனைவி இறந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்தார். மகளை தஞ்சாவூரில் திருமணம் செய்து கொடுத்தார். மகனும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. குடிசை வீடு முற்றிலும் சேதமானதால் கலையரங்கத்தில் தங்கினார். அப்பகுதியில் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர். நேரில் சென்று பார்வையிட்டவர், நரிக்குடி பி.டி.ஓ.,விடம் வீடு வழங்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். நேற்று முன் தினம் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வேலைக்கான உத்தரவை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

