/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போராட்டம் அறிவித்த நிலையில் நுாறு நாள் வேலை வழங்க உத்தரவு
/
போராட்டம் அறிவித்த நிலையில் நுாறு நாள் வேலை வழங்க உத்தரவு
போராட்டம் அறிவித்த நிலையில் நுாறு நாள் வேலை வழங்க உத்தரவு
போராட்டம் அறிவித்த நிலையில் நுாறு நாள் வேலை வழங்க உத்தரவு
ADDED : ஜூலை 01, 2025 02:18 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த புறநகர் பகுதிகள் மக்களுக்கு நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் வழங்க கோரி போராடி வந்த நிலையில் நுாறு நாள் வேலை பணியில் பயனாளிகளை சேர்க்க உத்தரவு வந்துள்ளது.
பாலையம்பட்டி ஊராட்சியில் 10 க்கும் மேற்பட்ட புறநகர் பகுதிகள் உள்ளது. இவற்றில் வசிக்கும் மக்களுக்கு நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கவில்லை எனக்கோரி போராட்டம் நடத்தி வந்தனர். தொடர்ந்து போராடியும் எந்தவித நடவடிக்கை இல்லை. இதையடுத்து, ஜூலை 3 ல், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் , விவசாய கூட்டமைப்புகள் முடிவு செய்தனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., காமேஸ்வரி பாலையம்பட்டி விரிவாக்க பகுதிகளில் உள்ள மக்களுக்கு, ஜூலை 3 ம் தேதியிலிருந்து நுாறு நாள் வேலை வழங்கப்படும் எனவும், வேலைக்கான விண்ணப்பம் பெற்று இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.