நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் அருகே மீசலுார் ஊராட்சி துவக்கப்பள்ளியில் 2024 -- 2025 ஜூன் முதல் 1ம் வகுப்பில் ஆங்கில வழிக்கல்வி செயல்பட உள்ளது.
இதனால் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் குடிநீருக்கான சில்வர் டிரம், குடிநீர் தொட்டி, தட்டு, டம்ளர், வாளி, தலைவர் புகைப்படங்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை சீர்வரிசை ஊர்வலமாக ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டு வந்தனர். விருதுநகர் ஒன்றிய கல்வி அலுவலர் ராமலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, ஊராட்சித் தலைவர் திருப்பதிசாமி உள்பட அலுவலர்கள், ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.