/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்ட அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய உத்தரவு
/
மாவட்ட அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய உத்தரவு
மாவட்ட அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய உத்தரவு
மாவட்ட அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய உத்தரவு
ADDED : மே 20, 2025 12:32 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை இடமாற்ற கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களில் ஒரே அலுவலகத்தில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களை மாவட்ட அளவில் உள்ள அலுவலர்கள், சார்நிலை அலுவலகங்களில் மாற்றம் செய்வதற்கு அதிகாரம் பெற்ற அலுவலர்கள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரத்தை ஒரு வாரத்திற்குள் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., அலுவலகம், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம், டி.ஆர்.ஓ., அலுவலகம், சிவகாசி சப் கலெக்டர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நல அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், திருநெல்வேலி நகராட்சி நிர்வாகம் மண்டல இயக்குனர், மருத்துவப்பணிகள் இணை இயக்குனர், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர், வேளாண் இணை இயக்குனர், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், கனிவள உதவி இயக்குனர், நகரஊரமைப்பு உதவி இயக்குனர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 63 அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் சங்கம் எதிர்ப்பு
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணிராஜ், செயலாளர் வைரவன்கூறியதாவது:
கலெக்டருக்கான அதிகார வரம்பை மீறி விருதுநகர் கலெக்டர் மாறுதல் தொடர்பான இக்கடிதத்தை அனுப்பி உள்ளார். ஊழியர்களை மாறுதல் செய்யும் அதிகாரம் மாநில அளவிலான துறை இயக்குனர்களுக்கு மட்டுமே உண்டு.சம்மந்தப்பட்ட துறையின் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மாறுதல் செய்யும் அதிகாரம் இல்லை.
மூன்றாண்டு பணி முடித்த அனைவரையும் கட்டாய இடமாறுதல் செய்தால், அவர்களுக்கு பயணப்படிவழங்க கூடுதல் நிதி செலவு ஏற்படும் என்பதால் கட்டாய இடமாறுதலை அரசு தவிர்த்து வருகிறது.
இந்நிலையில் அரசுக்கு நிதி செலவினம் ஏற்படுத்தும் வகையில் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என்றனர்.மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறும் போது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை தான். அரசாணையும் உள்ளது, என்கிறது.