/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாணவர் ஆராய்ச்சிக்கு அமைப்பு துவக்கம்
/
மாணவர் ஆராய்ச்சிக்கு அமைப்பு துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 03:24 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஏ.சி.எம் என்ற உலகளாவிய கம்ப்யூட்டர் கல்வி அமைப்பின் மாணவர் குழுவான பயிற்சி மையம் 'சிக்பெட்' தென்னிந்தியாவிலேயே முதல் முதலாக கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் தொடங்கப்பட்டது.
கம்ப்யூட்டர் துறையில் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கமாக கொண்டு ஏ.சி.எம். என்ற உலகளாவிய கம்ப்யூட்டிங் கல்வி ஆராய்ச்சி அமைப்பு உள்ளது. இதன் சார்பில் எம்பெடட் சிஸ்டம்ஸ் பிரிவில் மாணவர்களின் ஆராய்ச்சி, மேம்பாடு, ஆய்வுகள், பயிற்சி, மாநாடுகளை நடத்த சிக்பெட் என்ற அமைப்பு உள்ளது.
தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக இந்த 'சிக்பெட்' கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் தொடங்கப்பட்டது. விழாவிற்கு பல்கலை வேந்தர் கே.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். டாடா க்ளவுட் மற்றும் மேம்பாட்டு மைய தலைவர் பாலமுரளி பழனியாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துறையில் வளர்ச்சி, வாய்ப்புகள், தொழில் துறை எதிர்பார்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மின், மின்னணு, உயிர்வியல் பொறியியல் (சீடு) தலைவர் சிவக்குமார், சான்றளிப்பு - தர நிர்ணய பிரிவு இயக்குநர் தீபலட்சுமி, மின்னணு துறை தலைவர் சார்ல்ஸ் பிரவீன் உள்ளிட்டோர் துறையில் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.
தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. பல்கலை சிக்பெட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்கள் டாக்டர் ப. மணிகண்டன், வி.முனீஸ்வரன் விழாவை ஒருங்கிணைத்தனர்.