/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
''எம்.ஜி.ஆரின் மறு உருவம் நமது பாரத பிரதமர் மோடி''
/
''எம்.ஜி.ஆரின் மறு உருவம் நமது பாரத பிரதமர் மோடி''
''எம்.ஜி.ஆரின் மறு உருவம் நமது பாரத பிரதமர் மோடி''
''எம்.ஜி.ஆரின் மறு உருவம் நமது பாரத பிரதமர் மோடி''
ADDED : ஆக 05, 2025 06:39 AM

அருப்புக்கோட்டை : ''எம்ஜிஆரின் மறு உருவம் போன்று நமது பாரத பிரதமர் மோடி உள்ளார்.'' , என, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அருப்புக்கோட்டை நடந்த பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
அருப்புக்கோட்டையில் அந்த சட்டசபை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் பூத் கமிட்டி ,மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:
அருப்புக்கோட்டை தொகுதி 1977 ல், முதன் முதலாக எம்.ஜி.ஆர்., நின்று வெற்றி பெற்று முதல்வரான தொகுதி. ராசியான தொகுதி. எம்.ஜி.ஆரின் மறு உருவம் போன்று நமது பாரத பிரதமர் மோடி உள்ளார். இன்றைக்கு நம்முடைய ஒரே எதிரி தி.மு.க., தான். இவர்களுக்கு பின்னால் பெரிய தேச விரோத கும்பல் உள்ளது. இதேபோன்று காங்கிரஸ் கட்சியிலும் உள்ளது. காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி தொடருமா என்ற நிலையில் உள்ளது.
தென் மாவட்டங்கள் அதிக கொலைகள் நடக்கிறது. இதற்கு காரணம் தமிழ்நாட்டில் போதை பொருட்கள் பழக்க வழக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அரசு சொத்து வரி, மின் கட்டணத்தை அதிகமாக உயர்த்தியுள்ளது. மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* விருதுநகரில் நடந்த பா.ஜ. சட்டசபை தொகுதிக்கான பூத் கமிட்டி கூட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் 8 ஆயிரம் பூத் கமிட்டிகள் வரை உருவாக்கி உள்ளோம். ஆக. 17ல் திருநெல்வேலியில் வைத்து பூத் கமிட்டி மாநாடு நடக்கிறது. கன்னியாகுமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் என 5 லோக்சபா தொகுதிகளின் 30 சட்டசபை தொகுதியில் இருந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் வர வேண்டும்.
இது தேர்தலுக்கான சுறறுப்பயணம் மட்டுமல்ல. கட்சியின் அடிப்படையை பலப்படுத்த வேண்டும் என்பது தான் இப்பயணத்தின் நோக்கம். என்றார். மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாநில துணைத் தலைவர் கோபால்சாமி, கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உட்பட பலர் பங்கேற்றனர்.