/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி; விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
/
இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி; விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி; விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
இடியும் நிலையில் மேல்நிலைத் தொட்டி; விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : மார் 12, 2024 06:06 AM

காரியாபட்டி : பிசிண்டியில் இடியும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியை விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
காரியாபட்டி பிசிண்டி கிராமத்தில் குடிநீர் சப்ளை செய்ய 30 ஆண்டுகளுக்கு முன் அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்திற்குள் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. நாளடைவில் தொட்டி, பில்லர் வலுவிழந்து நீர் கசிவு ஏற்பட்டு, கம்பிகள் துருபிடித்து வெளியில் தெரிவதால், எப்போது இடிந்து விழுமோ என்கிற நிலை உள்ளது. இதனருகே மாணவர்கள் சுற்றித் திரிவர். மேலும் ரேஷன் கடையும் அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது. பொருட்கள் வாங்க வரும் மக்கள் கூடி நிற்பர்.
தற்போது அப்பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடப் பணிகள் முடிந்த பின் குழந்தைகள் படிக்க வருவர். அப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும் போது, இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டியால் விபத்து அபாயம் உள்ளது. இப்போது அகற்றாவிட்டால் அங்கன்வாடி மையம் கட்டிய பின், சில வருடங்கள் கழித்து இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மீது விழுந்து கட்டடம் சேதமாகும் வாய்ப்பு உள்ளது.
விபத்திற்கு முன் அப்புறப்படுத்தி வேறு இடத்தை தேர்வு செய்து மேல்நிலைத் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்திற்குள் மேல்நிலைத் தொட்டி, ரேஷன் கடை என மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் கட்டடங்கள் இருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

