/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அவசர கதியில் திறப்பு விழா காணும் மேல்நிலை தொட்டிகள்.
/
அவசர கதியில் திறப்பு விழா காணும் மேல்நிலை தொட்டிகள்.
அவசர கதியில் திறப்பு விழா காணும் மேல்நிலை தொட்டிகள்.
அவசர கதியில் திறப்பு விழா காணும் மேல்நிலை தொட்டிகள்.
ADDED : டிச 26, 2024 04:28 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டிகள் பணி முடியும் முன்பே அவசர கதியில் திறப்பு விழா செய்வதால், பயன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. ஊராட்சியின் பொது நிதி, எம்.எல்.ஏ., எம்.பி., நிதிகள் மூலம் தலா 15 முதல் லட்சத்திற்கு மேல் ஒவ்வொரு தொட்டிகளும் அதன் கொள்ளளவிற்கு ஏற்ப நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்படுகிறது.
ஆனால் முழுமையான பணிகள் முடிவதற்குள் மேல்நிலைத் தொட்டிகள் திறப்பு விழா கண்டு விடுகிறது.
அருப்புக்கோட்டை புறநகர் பகுதிகள், மெட்டுக் குண்டு, குல்லூர்சந்தை, பெரிய வள்ளிக்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டிகளை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் மூலம் அவசர கதியில் அதிகாரிகள் திறந்து வைக்கின்றனர்.
மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் செல்லும் குழாய்கள், இணைப்பு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறாமலேயே திறப்பு விழா செய்து விடுகின்றனர். அந்தந்த பகுதி மக்களும் தண்ணீர் வரும் என காத்திருக்க வேண்டியுள்ளது.
திறப்பு விழா கண்டு பல மாதங்கள் ஆன பின்பு பணிகள் செய்து தண்ணீர் விநியோகம் நடக்கிறது. இன்னும் சில மேல்நிலை தொட்டிகள் காட்சி பொருளாகவே உள்ளது.
இருக்கின்ற மேல்நிலைத் தொட்டிகளை செயல்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதை விட்டு விட்டு, புதியதாக மேல்நிலைத் தொட்டிகள் கட்ட அடிக்கல் நாட்டு விழாவும் தொடர்ந்து நடக்கிறது.
இதனால் பெரும்பாலான மேல்நிலை தொட்டிகள் பயனின்றியே கிடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் பணிகள் முழுவதும் பின் தான் மேல்நிலை தொட்டிகளுக்கு திறப்பு விழா செய்ய அனுமதிக்க வேண்டும்.
----

