/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் தேவை--
/
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் தேவை--
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் தேவை--
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் தேவை--
ADDED : டிச 27, 2025 05:57 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் வழியே செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.
ராஜபாளையம் வழி யாகவும் பழனி, திருச் செந்துார், ஐயப்பன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான அளவில் பக்தர்கள் பாத யாத்திரை சென்று வருகின்றனர்.
இவர்கள் விபத்து அதிகம் ஏற்படும் அபாயம் இருந்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொள்ளாமல் சென்று வருகின்றனர்.
சரவணன்: ராஜபாளை யத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் ஐயப்பன் கோயில், பழநி, திருச்செந்தூர் பகுதி களுக்கு நடை பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் ஸ்ரீவில்லிபுத்துார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இவ்வழியாக செல்கின்றனர்.
இவர்களுக்கான விபத்துகளை தவிர்க்கும் விதத்தில் பைகளில் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டுதல், ஒளிரும் குச்சி, குறுகலான பாதையில் செல்லும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் செல்லும் வழியில் தகுந்த ஓய்வு, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் அவசர உதவி எண்கள் பற்றியும் ஏற்பாடு செய்வதன் மூலம் தேவையற்ற விபத்து உள்ளிட்ட இன்னல்களை தவிர்க்கலாம்.

