/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் தண்ணீரில் மூழ்கிய நெல், மக்காச்சோளம்
/
மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் தண்ணீரில் மூழ்கிய நெல், மக்காச்சோளம்
மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் தண்ணீரில் மூழ்கிய நெல், மக்காச்சோளம்
மழையால் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் தண்ணீரில் மூழ்கிய நெல், மக்காச்சோளம்
ADDED : டிச 15, 2024 06:09 AM

ஸ்ரீவில்லிபுத்தூர: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதேபோல் மக்கா சோளமும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பில் நெல் ,மக்காச்சோளம் சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் சிவந்திபட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
இதேபோல் பிள்ளையார் குளம், நாச்சியார் பட்டி, ராமலிங்கபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் மக்காச்சோளம் சேதம் அடைந்தது. இதனை வேளாண்மை துறை உதவி இயக்குனர் தனலட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இதேபோல் வத்திராயிருப்பு தாலுகாவில் கான்சாபுரம், நெடுங்குளம், கூமாபட்டி, அர்ச்சுனாபுரம்,புதுப்பட்டி, தம்பி பட்டி, கோட்டையூர்,மகாராஜபுரம், ஆயர்தர்மம், குன்னூர், சீலநாயக்கன்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யப்பட வேண்டிய நிலையில் வளர்ந்து காணப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
இதுகுறித்து அர்ச்சனாபுரம் விவசாயி காளைபாண்டி கூறியதாவது;
வத்திராயிருப்பு தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் 3 போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது பெய்த கனமழையால் எங்களுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நெல் பயிர்களும் , சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் வளர்ந்திருந்த நெற் பயிர்கள் மழையால் சேதமடைந்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் நெல் அறுவடை செய்ய தயாராக இருந்த நிலையில் கனமழை பெய்து நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் மிகுந்த பொருளாதார இழப்பிற்கும், மன வேதனைக்கும் ஆளாகியுள்ளோம் என்றார்.