/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவலுாரில் வயலுக்குள் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் சேதம்
/
செவலுாரில் வயலுக்குள் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் சேதம்
செவலுாரில் வயலுக்குள் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் சேதம்
செவலுாரில் வயலுக்குள் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் சேதம்
ADDED : ஜன 12, 2024 12:39 AM

சிவகாசி : சிவகாசி அருகே செவலுாரில் அறுவடைக்கு தயாரான நிலையில் வயலுக்குள் தண்ணீர் புகுந்துதால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிவகாசி அருகே எரிச்சநத்தம், செவலுார் கிருஷ்ணமநாயக்கன்பட்டி, குமிழங்குளம் சித்தமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், சோளம் முக்கிய பயிராக உள்ளது. இதில் செவலுாரில் 200 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்தனர். துவக்கத்தில் பெய்த மழையால் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்திருந்தது. ஒரு ஏக்கருக்கு உழவு, களை எடுத்தல், மருந்து தெளித்தல் என ரூ. 30 ஆயிரம் வரை செலவழித்து இருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் தண்ணீர் வயலுக்குள் புகுந்தது. 150 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. பயிர்களை அறுவடை செய்ய முடியாததால் அவைகள் மீண்டும் முளைக்க துவங்கியுள்ளது. இதனால் முற்றிலும் அறுவடை செய்ய வழியில்லை.
நன்றாக விளைந்து லாபம் கொடுக்கும் என விவசாயிகள் நினைத்த வேளையில் தொடர் மழை பெய்து மொத்த பயிர்களையும்சேதமானதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
குமிலங்குளம், கிருஷ்ணம நாயக்கன்பட்டி, சித்தமநாயக்கன்பட்டி பகுதிகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. மேலும் மக்காச்சோளம் பயிர்களும் தொடர்மழையில் சேதம் அடைந்துள்ளது.
கருப்பையா, விவசாயி, இந்த முறை நெல் அமோக விளைச்சல் கொடுக்கும் என மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் தண்ணீர் வயலுக்குள் புகுந்து தேங்கி விட்டது. ஏக்கருக்கு 40 மூடைகள் நெல் கிடைக்க வேண்டிய நிலையில் மொத்த பயிர்களும் அழிந்துவிட்டது. உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கினால் ஓரளவிற்கு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.