ADDED : ஜன 28, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் கொண்டனேரி கண்மாய் அருகே கம்மாபட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தாசில்தார் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். ஆர்.ஐ சுந்தரராஜன், விவசாயி சங்க நிர்வாகிகள் ராமச்சந்திர ராஜா ,அம்மையப்பன் முன்னிலை வகித்தனர்.
சுற்றுப்பகுதியில் உள்ள கொண்டநேரி அலப்பசேரி, கடம்பன் குளம், கருங்குளம், புளியங்குளம், புதுக்குளம் கண்மாய்களை சேர்ந்த ஆயிரம் எக்டேர் பகுதி நெல் விவசாயிகள் இதனால் பயன்பெறுவர்.
நாள் ஒன்றுக்கு 800 மூடை திறனுடன் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு கண்மாய்களின் செழிப்பு, அதிக மழை காரணமாக நெல் பாசன பரப்பு அதிகரித்துள்ளதால், அறுவடை முடியும் கடைசி கட்டம் வரை கொள்முதல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.