
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் மறைந்த ராஜப்பனின் 2 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரிமா சங்கம் சார்பில் மனித நேயம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த போட்டியில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் லாரன்ஸ் ரத்தினராஜ், செயலாளர் செல்வகுமார், பொருளாளர் பஞ்சமூர்த்தி, முதல்வர் மல்லேஸ்வரி அரிமா சங்க செயலாளர் லட்சுமணன், தலைமையில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

