நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் கடம்பன்குளம் கண்மாய் கரையில் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் 8000 பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது.
கடல் சார் பொறியியலாளர் மதுசூதனன் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தார் ரெங்கசாமி பங்கேற்று துவங்கி வைத்தார். முடங்கியார் ரோடு தொடங்கி சுற்றியுள்ள கண்மாய் கரையில் அழிசோடை தலைமையிலான விவசாயிகள் நல குழு உறுப்பினர்கள் 15 பேர் ஒத்துழைப்புடன் பனை விதைகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் கண்மாய் கரை பலம் அதிகரிப்பதுடன் கரைகளின் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

