ADDED : செப் 27, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அணிகள், சிவகாசி மாநகராட்சி சார்பில் துாய்மையே பாரதத்தை வலியுறுத்தி சிறு குளம் கண்மாய் கரையில் பனை விதை நடும் விழா, நெகிழி விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தலைவர் திலகவதி, செயலர் அருணா புரவலர்களாக செயல்பட்டனர். முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தனர். கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் பொது இடங்களில் கிடந்த நெகிழிப் பைகளை சேகரித்தனர்.
அண்ணாதுரை காய்கறி மார்க்கெட் முன்பு நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது. மாநகர நல அலுவலர் சரோஜா, சுகாதார அலுவலர்கள் சுரேஷ், திருப்பதி, மாநகராட்சி கவுன்சிலர்கள், காளி ராஜன் பங்கேற்றனர்.