ADDED : அக் 13, 2024 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் செங்குளம் கண்மாய் கரையில் பசுமை மன்றம் சார்பில் பனை விதை நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
அசோகன் எம்.எல்.ஏ., அருண் ஐஸ் கிரீம் நிர்வாக இயக்குனர் சந்திரமோகன், விருதுநகர் இதயம் முத்து முன்னிலை வகித்தனர். புளியங்குடி இயற்கை விவசாயி அந்தோணிசாமி ஆயிரம் பனை விதைகள் வழங்கினார். செங்குளம் கண்மாயின் வடக்கு கரையில் பனை விதை நடப்பட்டது.