/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்கள் எதிர்ப்பால் ஊராட்சி கட்டட பணி பாதியில் நிறுத்தம்
/
மக்கள் எதிர்ப்பால் ஊராட்சி கட்டட பணி பாதியில் நிறுத்தம்
மக்கள் எதிர்ப்பால் ஊராட்சி கட்டட பணி பாதியில் நிறுத்தம்
மக்கள் எதிர்ப்பால் ஊராட்சி கட்டட பணி பாதியில் நிறுத்தம்
ADDED : செப் 28, 2024 04:19 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், இரும்பு கம்பிகள் உட்பட சாமான்கள் மாதக் கணக்கில் வீணாக கிடக்கிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது குல்லூர்சந்தை ஊராட்சி . இங்கு ஊராட்சி கட்டடம் கட்ட ஆதிதிராவிடர் காலனியில் இடத்தை தேர்வு செய்யப்பட்டு, அங்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்ட எட்டு மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில், காலனி மக்கள் ஊராட்சி அலுவலக கட்டடம் வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்றும், எங்களுக்குரிய பகுதியில் எங்களுக்கான சமுதாயக்கூடம் உட்பட கட்டடங்களைத் தான் கட்ட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கட்டடம் கட்டும்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வேறு இடத்தை தேர்வு செய்யாமல் பணியை கிடப்பில் போட்டு விட்டனர்.
இதில் கட்டடம் கட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்பில் இரும்பு கம்பிகள், தளவாட சாமான்கள் பயன்படுத்தப்படாமல் வெயிலிலும் மழையிலும் நனைந்து பல மாதங்களாக வீணாக கிடக்கிறது. அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டடத்தை வேறு இடத்தில் கட்டவும், வேறு பணிக்காக வீணாக கிடக்கிற இரும்பு கம்பிகளை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.