/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குடிநீர் கேட்டு குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
குடிநீர் கேட்டு குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் கேட்டு குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : ஜூலை 26, 2025 03:18 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாலையம்பட்டி ஊராட்சி . இதற்கு உட்பட்ட யாதவர் தெரு, நாயக்கர் தெரு, செல்வ சுந்தர விநாயகர், தெரு ஆகியவற்றில் ஒரு மாதமாக ஊராட்சி குடிநீர் வரவில்லை. இது குறித்து அப்பகுதியினர் ஊராட்சியில் புகார் கொடுத்தும் குழாய் பழுது, சரி செய்து குடிநீர் வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் கூறி வந்த நிலையில், பணி ஒன்றும் நடக்காததால் நேற்று காலை 10:00 மணிக்கு இப்பகுதி பெண்கள் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பெண்கள், எங்கள் பகுதிகளுக்கு குடிநீர் வந்து ஒரு மாதம் ஆகிறது. புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அனுப்புகின்றனர். எங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

