/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு ஓரத்தில் குப்பையை கொட்டி எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள்
/
ரோடு ஓரத்தில் குப்பையை கொட்டி எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள்
ரோடு ஓரத்தில் குப்பையை கொட்டி எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள்
ரோடு ஓரத்தில் குப்பையை கொட்டி எரிக்கும் ஊராட்சி பணியாளர்கள்
ADDED : ஜன 11, 2025 05:13 AM
திருச்சுழி: திருச்சுழி அருகே மேலையூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் ரோடு ஓரங்களில் குப்பையை கொட்டி எரிப்பதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மேலையூர் ஊராட்சி. இங்கு பத்துக்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
ஊராட்சியில் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து அதற்கென உள்ள பிளான்ட்களில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் மேலையூர் ஊராட்சியில் இந்த திட்டத்தை காற்றில் பறக்கவிட்டு, தூய்மை பணியாளர்களே வண்டியில் குப்பையை கொண்டு வந்து ரோடு ஓரங்களில் கொட்டி தீ வைக்கின்றனர்.
இதனால் ஏற்படும் புகையில் சுகாதாரக் கேடும், மக்களுக்கு சுவாச கோளாறும் ஏற்படுகிறது.
குப்பைகளை முறையாக அதற்கென அமைக்கப்பட்டுள்ள பிளான்ட்டுகளில் கொண்டு சேர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கண்டிப்பு காட்ட வேண்டும்.