/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாராமுகம்..: ரோட்டோர இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை தேவை
/
பாராமுகம்..: ரோட்டோர இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை தேவை
பாராமுகம்..: ரோட்டோர இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை தேவை
பாராமுகம்..: ரோட்டோர இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை தேவை
ADDED : ஆக 26, 2025 03:14 AM

மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான ஆட்டு இறைச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆடுவதைக்கூடங்கள் கட்டப்பட்டு அங்கு ஆடுகள்  கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்த பின்னரே அறுக்கப்படும். நகராட்சி சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் முன்னிலையிலும் ஆடுகள் வதை கூடங்களில் அறுக்கப்பட்டு பின்னர் கடைகளுக்கு விற்பனைக்காக நகராட்சி சீல் வைத்து அனுப்பப்படும்.
மக்களும் நகராட்சி சீல் வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்த பின்னரே வாங்கி சென்றனர். ஆனால் தற்போது நகரங்கள் விரிவடைந்து வரும் நிலையில் சாலையோர ஆட்டு இறைச்சி கடைகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
பல  கடைகளில் வாசலில் ஆடுகள் கட்டி வைக்கப்பட்டு மக்கள் முன்னிலையில் கால்நடை மருத்துவரின் சான்றிதழ் இல்லாமல் அறுக்கப்பட்டு விற்பனை செய்து வருகின்றனர்.  இதில் நோய் பாதித்த ஆடுகளின் இறைச்சியை சாப்பிடும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது போன்ற கடைகளை சுற்றிலும் தெரு நாய்கள் அதிக அளவில் உலா வருகின்றன. அவை இறைச்சி கழிவுகளையும் மக்கள் கூடும் பொது இடத்தில் வைத்து உண்ணும் நிலை உள்ளது.
ஆடுவதைக்கூடங்களில் இறைச்சி கழிவுகள் சேகரிக்கப்பட்டு முறைப்படி அகற்றப்படும்.இதன் மூலம் தெரு நாய்களின் தொல்லையும் இருக்காது. தற்போது மாநகராட்சி நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஆடுவதைக்கூடங்களை கண்காணிக்காமல் உள்ளதால் சாலையோரம் ஆடுகளை அறுத்து வெட்டி  விற்கும் நிலை தொடர்கிறது.
எனவே மாநகராட்சி நகராட்சி அதிகாரிகள் ஆடுவதைக்கூடங்களில் மட்டுமே ஆடுகளை வதை செய்யவும் கடைகளில் ரோட்டின் ஓரங்களில் இறைச்சிக் கடை நடத்துபவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

