/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
/
பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்
UPDATED : ஏப் 07, 2025 07:52 AM
ADDED : ஏப் 07, 2025 06:39 AM

கேட்ட வரும் தரும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன்
விருதுநகரில் பராசக்தி மாரியம்மன் கோயில் மதுரைக்கு தெற்கே 48 கி.மீ., தொலைவிலும் சாத்துார் வடக்கே 26 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. 1850ல் பீடம் அமைத்து, அதன் மீது பராசக்தி மாரியம்மன் சிலையை வடக்கு நோக்குமாறு நிறுவி, பீடத்தை சுற்றிலும் மண்சுவர் எழுப்பி ஓலையால் கூரைவேய்ந்து வழிபாடு செய்துள்ளனர். பின்பு 1910ல் தரை மட்டத்தில் இருந்த அம்பாள் விக்ரஹம் உயர்த்தி புனரமைக்கப்பட்டது.
விருதுநகர் ஹிந்து நாடார்கள் பொது மகமை பண்டிலிருந்து கற்பகிரகம், அர்த்தமண்டபம் ஆகியவற்றை கற்சிலைகளுடன் கூடிய கல்கட்டுமானத்துடன் கட்டி 1923 ஜூலை 20ல் நிறைவு பெற்றது. பராசக்தி மாரியம்மன் கோயில் செவ்வகவடிவில் உயர்ந்த மதில் சுவருடன் 61அடி நீளம் 55 அடி மேல்புறமும் அகலத்துடன் வைத்து வடபுறமும் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜபுகோபுரம்:
தெற்கு கிழக்கு சுவர்கள் சந்திக்கும் இடத்தில் அக்னி சட்டி செலுத்தும் இடம் அமைந்துள்ளது. வடக்கு வாச-லுக்கு நேரே ஐந்தடி உயரத்தில் மூன்றுக்கு மூன்று சதுர அடிகளுடன் கூடிய பலிபீடத்தில் மக்கள் தங்களது நேர்த்திக்கடனாக உப்பு, மிளகு செலுத்துகின்றனர். பலிபீடத்தை அடுத்து நான்குக்கு நான்கு சதுரகல்மேடையில் 36 அடி உயரம் உள்ள தேக்கு மரத்திலான தங்ககொடிமரம் நிறுவப்பட்டுள்ளது. கொடி மரத்தின் உச்சியில் நின்ற நிலையில் சிங்க உருவம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கு நுழைவாயிலில் சாலகோபுரம் நிறு-வப்பட்டுள்ளது. கோயிலின் மேற்கு நுழைவாயிலின் மேற்புறம் ராஜகோபுரம் அமைக்கும் பணி 1966ல் துவக்-கப்பட்டு 1967 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
தங்க கோபுரம்:
கற்பகிரகம், அர்த்தமண்டபத்தின் கிழக்கு, மேற்கு,வடக்கு, தெற்கு பகுதிகளில் வேலைப்பாடுகளுடன் கூடிய ராமாயண நிகழ்ச்சிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கற்பகிரகம் 2011ல் தங்ககோபுரமாக புனரமைக்கப்பட்டது. பரா-சக்தி மாரியம்மன் நான்கு கரங்களுடன் இடதுகால் மடித்து வலதுகால் தொங்கவிட்டு, அமர்ந்தநிலையில் தலை-யில் கிரீடத்துடன் வலப்பக்க கரத்தில் கத்தியும், நாகப்பாம்பு சுற்றியுள்ள உடுக்கையுடனும், இடப்பக்க கரத்தில் திருநீற்றுக் கொப்பரையுடனும் அருள் வழங்குகிறாள்.
பராசக்தி மாரியம்மன் கோயில் கருவறை, அர்த்தமண்டபம் நிறுவப்பட்டு 2023 ஜூலையில் நுாற்றாண்டு பூர்த்தி-யானதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அக். 27ல் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சிறியபீடத்தில் எளிமையாக அமைந்த மழைத் தெய்வ வழிபாடு தற்போது தங்ககொடிமரம், தங்ககோ-புரத்துடன் தெய்வத் திருப்பணியாளர்களால் அலங்கரித்து 2023 நவ.24ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
-என்.ஏ.தங்கராஜன் நாடார், தலைவர், விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம்.
///////////////
........................
///////////////
பரவசமூட்டும் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா நேற்று நடந்தது.
விருதுநகர், சிவகாசி, திருத்தங்கல், அருப்புக்கோட்டை, செங்குன்றாபுரம், இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், காளி-யம்மன், முத்தாலம்மன் ஆகிய கோயில்களில் பங்குனி பொங்கலையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்து-வர்.
இக்கோயில் பங்குனிப் பொங்கல் விழா மார்ச் 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் பல்வேறு வாகனங்-களில் வீதியுலா நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடந்தது. கோயிலுக்கு முன் காலை முதலே ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக இரவு அடுப்பு பூஜை நடந்தது. அதை தொடர்ந்து பராசக்தி அம்மன் தங்ககுதிரை வாகனத்தில் வீதியுலா வந்தார். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் விரதம் இருப்பர். நேர்த்திக் கடன் செலுத்து-வதற்கு முன் நாட்டுக்கோழி குழம்பு, கருவாட்டுக் குழம்பு, கொழுக்கட்டை என செய்து மண்சட்டியில் சமைத்து அம்மனுக்கு படைப்பர். அதன்பின் விரதத்தை முடித்து கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்துவர்.
இந்த பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
-- லெனின் நாடார்
//////////////////////
..................--------------------------------------------------------------------------------................
/////////////////////
வேண்டுதலை நிறைவேற்றும்
பங்குனி பொங்கல் விழா
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி முதல் ஞாயிறு அன்று 21 நாள்கள் விரதம் இருந்து அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்துவார்கள். விழா சாற்றிய பிறகு வீட்டை வண்ணம் அடித்து, வீட்டு வாசலில் வேப்பிலை கட்டி, கோயிலுக்குச் சென்று கையில் காப்புக்கட்டி, 21 நாள் விரதம் இருந்து அக்னிச்-சட்டி எடுத்தல், கயிறு குத்தல் ஆகிய வேண்டுதல்களை நிறைவேற்றுவர்.
இந்த விழாவில் 14 ம் நாள் கொடியேற்றம் நடைபெறும்.
22ம் நாள் கயிறுகுத்து அன்று 1, 21, 51, 101 அக்னிச் சட்டிகள் எடுத்து நகர் வலம் வந்து சங்கிலி கருப்பசாமியை வணங்கி விட்டு 21 நாள் அலங்கரிக்கப்பட்ட கொத்தனார் மண்டகப்படியில் உற்ஸவரை
வணங்கி பின் கோயிலுக்குச் சென்று சட்டியைச் செலுத்துவர்.
23ஆம் நாள் தேரோட்டம் நடக்கும். முதலில் நெய்பந்தம் பிடித்துக்கொண்டு சென்று, சிறிய சப்பரத்தில் விநாயகர் வீற்றிருப்பார். பராசக்தி மாரியம்மன் பெரிய சப்பரத்தில் வீற்றிருப்பாள். 25ஆம் நாள் கொடியிறக்கப்படும். 28ஆம் நாள் வரை மண்ட-கப்படி நடக்கும்
- கனகவேல் நாடார்
//////////////////
............................
//////////////////
மக்களை மகிழ்விக்க பொருட்காட்சி
பொங்கல் விழாவை முன்னிட்டு கே.வி.எஸ்., பள்ளிகளின் நிர்வாகத்தால் 77 ஆண்டாக பொருட்காட்சி நடக்கிறது.
கே.வி.எஸ்., பள்ளியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக நிதியினைப் பெருக்க பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். மக்களின் பொழுதுபோக்கை மையப்படுத்தி, மக்களை மகிழ்விக்கவும், பள்ளிகளுக்கு பொருளுத-வியை ஈட்டவும் பல மாற்றங்களுடன் பொருட்காட்சி நடத்தப்படுகிறது.
50 ஆண்டுகளாக, கோயில் அருகே உள்ள பள்ளி மைதானத்தில் நடந்து வந்து பொருட்காட்சி, தற்போது மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி தற்போது நடக்கிறது.
-கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு/ முரளிதரன்
////////////////////
................................
////////////////////
வேப்பிலைக்காரி மாரியம்மன்
ஜமதக்னி முனிவரை கார்த்தவீரியன் என்பவன் கொன்றான். முனிவரின் மனைவி ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். பெருமழை பெய்து, சிதை அணைந்தது. மழை வெள்ளத்தில் ரேணுகா-வின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வேப்பமரத்தடியில் ஒதுங்கினாள். சிதையில் பட்ட தீயால் உடலில் காயங்கள் இருந்தன. வேப்ப இலையை ஆடையாக்கி, தீக்காயம் குணமாக மஞ்சள் பூசிக் கொண்டாள். குளிர்ச்-சிக்காக கூழைப் பருகினாள். சிவபார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள். தவத்திற்கு இணங்கிய அம்-பிகை தன் அம்சத்தை ரேணுகாவுக்கு வழங்கினாள்.
அது முதல் மாரியம்மனாக அருள்புரியத் தொடங்கினாள். இதன் காரணமாக வெப்பு நோய்களான அம்மை, கொப்பளம், வயிற்றுவலி தீர மாரியம்மனுக்கு வேப்பிலை ஆடை கட்டியும், கூழிட்டும், தீ மிதித்தும் வழிபடத் தொடங்கினர்.
-சரஸ்வதி டெக்ஸ்டைல்ஸ்/ தருண்
////////////////////
................................
////////////////////
கருமேகமே காளி
முத்தான மழை நீரே மாரி
காளியும் மாரியும் வேறு வேறு தெய்வங்கள் அல்ல. இருவரும் ஒருவரே. பழங்காலத்தில் மக்கள் விவசா-யத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். உழவுத்தொழில் செழிக்க மழை அவசியம். அதனால் மழை வேண்டி பொங்கலிட்டு வழிபட்டனர். மழை பெருகி விவசாயம் செழித்தது. மழைக்கான அறிகுறியாக வானத்தில் கரு-மேகம் கூடி நிற்பதை காளி என்றும், முத்து முத்தாய் மழைநீர் மண்ணில் விழுவதை மாரி என்றும் கூறினர். இயற்கையை இரு பெண் தெய்வங்களாகக் கருதினர். மேகத்தை 'அக்கா காளி' என்றும் பின் வரும் மழையை 'தங்கை மாரி' என்றும் போற்றினர்.
-ஸ்ரீவித்யா கல்லுாரி/ திருவேங்கடராமானுஜ தாஸ்
////////////////////
................................
////////////////////
////////////////////
................................
////////////////////
15 அடி சூலாயுதம்
பராசக்தி மாரியம்மன் கோயிலில் ஆறுஅடுக்கு ஆர்ச் போன்ற ராஜகோபுரத்தில் 48க்கும் மேலான சிற்பங்கள் அமைக்கும் பணி 1975ல் துவக்கப்பட்டு 1981ல் முடிக்கப்பட்டது. 15 அடி உயர மின்விளக்காலான சூலாயுதம் பராசக்தி மாரியம்மன் ஆசி வழங்குமாறு நிறுவப்பட்டுள்ளது. கற்பகிரகம், அர்த்தமண்டபத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் ராமாயண நிகழ்ச்சிகள் பொறிக்கப்பட்டுள்ளன. கற்பகிரகம் 2011ல் தங்ககோபுரமாக புனரமைக்கப்பட்டது.
-ஆர்.ஜே., மந்த்ரா ஆங்கிலப்பள்ளி/ ரஜினி
////////////////////
................................
////////////////////

