ADDED : அக் 16, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கல்லுாரி வளர்ச்சி, துறை வளர்ச்சி, மாணவர்களின் திறன் மேம்பாடு, கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மேம்படுத்தும் நடவடிக்கைகள், 2025 --2026 கல்வி ஆண்டில் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் , தொழில்துறை பயிற்சிகள் பற்றிய விபரங்கள் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.
மாணவர்களின் புதுமை ஆராய்ச்சி தொழில்நுட்பத் திறன் தொழில் முனைப்பாங்கு வளர்க்க கல்லூரி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. பேராசிரியர்கள், துறைகளின் தலைவர்கள், மாணவர்களின் பெற்றோர் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.