/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அங்கன்வாடியை சுற்றிலும் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் பாதிப்பு பெற்றோர் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 13, 2025 03:52 AM

விருதுநகர்: குல்லுார்ச்சந்தை அங்கன்வாடி மையம் பின்புறம் குப்பை சேகரிக்கப்படும் இடமாகவும், திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
குல்லுார்ச்சந்தை நாயக்கர்தெரு அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் படிக்கின்றனர். இம்மையத்திற்கு சுற்றுச் சுவர் கிடையாது. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறிவிடும். இதனால் மழைக் காலங்களில் மையத்திற்கு வரும் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இவ்வூரின் பொதுக் கழிப்பிடம் பராமரிப்பின்றி இடிந்தது. மாற்றுக் கழிப்பிடம் இதுவரை கட்டப்படவில்லை. இதனால் அங்கன்வாடி பின்புறம் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் 3 குழிகள் தோண்டப்பட்டு அருகில் உள்ள ஊர்களில் இருந்து குப்பை சேகரிக்கப்படுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. மண்புழு உரம் தயாரிக்க ரூ.73 ஆயிரம் செலவில் உரக்கூடம் அமைக்கப்பட்டது. ஆனால் குடி'மகன்களின் பார்'ஆக மட்டுமே அவை செயல்படுகின்றன. காலையில் அங்கன்வாடி வரும் குழந்தைகள் குவிந்து கிடக்கும் மதுபான டம்ளர்களை கடந்தே வரவேண்டியுள்ளது.
பெற்றோர் கூறுகையில், இம்மையம் சுடுகாடு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இதனருகில் இருந்த பாழடைந்த கட்டடம் சில மாதங்களுக்கு முன் மையம் மீதே விழுந்தது. சுகாதார சீர்கேடுகளால் ஊருக்குள் வேறு இடத்தில் மையம் அமைக்க பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை' என்றனர்.