/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நரிக்குடி பட்டமங்கலத்தில் பூட்டி கிடக்கும் துவக்கப்பள்ளி: மீண்டும் திறக்க பெற்றோர் கோரிக்கை

ADDED : ஜூன் 24, 2025 03:06 AM
நரிக்குடி: நரிக்குடி பட்டமங்களத்தில் ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் துவக்கப்பள்ளியை மீண்டும் திறக்க வேண்டுமென பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி பட்டமங்களத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாணவர்கள் கல்வி பயில ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது. 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். 3 ஆசிரியர்கள் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், ரூ. பல லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. நாளடைவில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. இரு ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன் 3 மாணவர்கள் மட்டுமே படித்தனர். ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று சென்றனர். ஓராண்டாக பள்ளி செயல்படாமல் மூடப்பட்டது. தற்போது வளர்ந்து படிக்கும் சூழ்நிலையில் உள்ள மாணவர்கள் உள்ளூரில் பள்ளிக்கூடம் இல்லாததால் பக்கத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிடாரிச்சேரி தொடக்கப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது உள்ளூரில் ஏராளமான மாணவர்கள் பள்ளி செல்லும் நிலையில் உள்ளதால் மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம் உண்டு :