/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆர்.டி.இ., தொகை தாமதத்தால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்
/
ஆர்.டி.இ., தொகை தாமதத்தால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்
ஆர்.டி.இ., தொகை தாமதத்தால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்
ஆர்.டி.இ., தொகை தாமதத்தால் கல்வி கட்டணம் செலுத்த முடியாத பெற்றோர்
ADDED : ஜூலை 09, 2025 06:33 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஆர்.டி.இ., தொகை தாமதத்தால் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்த பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த முடியாது கண்ணீர் வடிக்கின்றனர்.
தமிழகத்தில் 15 ஆண்டுகளாக கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது.
இச்சேர்க்கை அறிவிப்பு ஏப்., 2வது வாரத்தில் வெளியிடப்பட்டு, மே மாத இறுதிக்குள் முடிவடையும். ஆனால் இந்தாண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகி விட்ட நிலையில், வழக்கமாக கட்டணம் செலுத்தி வரும் பெற்றோருக்கும் இன்னும் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது.
ஆர்.டி.இ., தொகை தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஏழை பெற்றோர், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்ற தினக்கூலி பணிபுரிவோர் தங்கள் பிள்ளைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்த்து பயனடைந்துள்ளனர்.
கடந்தாண்டுகளில் வழங்கப்பட்டு வந்த கல்வி கட்டணத்தொகை தற்போது வழங்கப்படாததால் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலும், உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க முடிவெடுத்துள்ளனர்.
இது நாள் வரை ஆங்கில மீடியம் படித்து விட்டு, உதவி பெறும் பள்ளி ஆங்கில பள்ளிகளுக்கு மாறுதலாகும் போது மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு இந்த பணத்தை விடுவித்து உடனடியாக ஆர்.டி.இ., பயனாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.