/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜபாளையத்தில் நோய் பரப்பும் கிடங்காக மாறிய பார்க்
/
ராஜபாளையத்தில் நோய் பரப்பும் கிடங்காக மாறிய பார்க்
ராஜபாளையத்தில் நோய் பரப்பும் கிடங்காக மாறிய பார்க்
ராஜபாளையத்தில் நோய் பரப்பும் கிடங்காக மாறிய பார்க்
ADDED : செப் 09, 2025 03:41 AM

ராஜபாளையம்,: ராஜபாளையம் நகராட்சியில் முதியோர், குழந்தைகள் பொழுதுபோக்க அமைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பூங்கா நோய் பரப்பும் கேந்திரமாக மாறி உள்ளதை சரி செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ராஜபாளையத்தில் நகராட்சிக்கு உட்பட்ட 8 பூங்காக்கள் புனரமைக்க ரூ.2.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2018ல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி ரோட்டில் உள்ள பி.எஸ்.கே பார்க், ஆர்.ஆர் நகரில் உள்ள பார்க் என பெரும்பாலானவை பயன்பாட்டில் இல்லை.
முடங்கியார் ரோட்டில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் பார்க் நீரூற்றுகள் செயல்பாடு இல்லை. குப்பைகள் தரம் பிரிப்பு செயல்பாடு இல்லை. நடைபாதையில் கழிவு மூட்டைகளை குவித்து வைத்து துர்நாற்றம் வீசுகிறது.
பொதுமக்கள் குழந்தைகள் முதியோர் விளையாடவும் நடை பயிற்சி மேற்கொண்டு மன அமைதியை தேடவும் பல கோடி ரூபாய் அளவில் அமைக்கப்பட்ட பொது இடமான பார்க்குகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.