/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பார்க்கிங் அவசியம்: ரோட்டில் டூவீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
/
பார்க்கிங் அவசியம்: ரோட்டில் டூவீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
பார்க்கிங் அவசியம்: ரோட்டில் டூவீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
பார்க்கிங் அவசியம்: ரோட்டில் டூவீலர்கள், கார்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஏப் 01, 2025 05:43 AM

சிவகாசி, சாத்துார்,விருதுநகர் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட நகர் பகுதியில் மெயின் ரோடு, பஜார்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நகர் பகுதியில் ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் நகை கடைகள் பல திறக்கப்பட்டுள்ளது. இதுபோன்று புதியதாக உருவாகும் வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லாத நிலை உள்ளது. இங்கு வருபவர்கள் பார்க்கிங் வசதி இல்லாத நிலையில் ரோட்டில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் சாலை ஓரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள் விலகிச் செல்லக் கூட வழியின்றி தவிக்கும் நிலை உள்ளது. பல பாதசாரிகள் ரோட்டில் நடந்து செல்வதால் வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்கள் பலியாகும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
போதுமான பார்க்கிங் வசதியின்றி கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் அருகில் நகராட்சிக்கு சொந்தமான காலியிடங்கள் பல உள்ளன.போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண இந்த பகுதிகளை நகராட்சி ,உள்ளாட்சி நிர்வாகங்கள் பார்க்கிங் பகுதியாக அறிவித்து வாகனங்களை நிறுத்துவதற்குரிய வசதிகளை செய்து தருவதன் மூலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
மேலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கும் போது நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.மக்களும் தங்கள் இருசக்கர வாகனங்களை ரோட்டில் நிறுத்திவிட்டு போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் செலுத்தும் நிலையும் மாறும்.
எனவே நகர் பகுதியில் பார்க்கிங் வசதி இல்லாத வர்த்தக நிறுவனங்களுக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.