/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் வாகன நிறுத்துமிடம், கடைகள் ஏலம்
/
சிவகாசியில் வாகன நிறுத்துமிடம், கடைகள் ஏலம்
ADDED : மார் 15, 2024 06:30 AM
சிவகாசி : சிவகாசியில் வாகன நிறுத்தும் இடங்கள், சுகாதார வளாகங்கள், கடைகள் ஆகியவற்றை ஒப்பந்தம் எடுப்பதற்கான ஏலம் இரண்டாவது முறையாக நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்  கடைகள்,  வாகன நிறுத்துமிடம், சிவன் கோயில் மாடவீதியில் உள்ள  வணிக வளாக கடைகள், டூவீலர் ஸ்டாண்ட், வேன் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகள், தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யும் உரிமை, பொது கட்டண கழிப்பிடங்கள், மீன் மார்க்கெட்,  வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது ஏலம் மூலம் ஒப்பந்தம் விடப்படும்.
இவற்றில் 15 இனங்களுக்கான ஒப்பந்தம் முடிந்த நிலையில் 2024 முதல் 2027 ஆண்டுகளுக்கான ஒப்பந்த ஏலம் பிப். 27 ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள், புதியவர்கள் என பலரும் ஏல தொகைக்கான வங்கி டி.டி உடன் விண்ணப்பித்த நிலையில் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
15 இனங்களுக்கான ஒப்பந்த ஏலம் மார்ச் 14 ல்  நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.  நேற்று காலை வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள் வங்கி காசோலை உடன் ஒப்பந்தம் எடுக்க மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.
ஆனால் அறிவிப்பு பலகையில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ஒப்பந்தம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இரண்டாவது முறையாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் வியாபாரிகள், ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

