/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க பயணிகள் வலியுறுத்தல்
/
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க பயணிகள் வலியுறுத்தல்
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க பயணிகள் வலியுறுத்தல்
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க பயணிகள் வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2024 07:10 AM
சாத்துார் : சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சாத்துார் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.தற்போது இட நெருக்கடி காரணமாக அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வர முடியாத நிலை உள்ளது. டவுன் பஸ் கள் மட்டுமே பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று வருகின்றன. திருநெல்வேலி நாகர்கோவில் செல்லும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னை ,கோயம்புத்துார் செல்லும் பஸ்கள் வெம்பக்கோட்டை ரோடு விலக்கில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். பைபாஸ் ரைடர் ,அரசு அதிவிரைவு பஸ்கள் நகருக்குள் வராமல் நான்கு வழிச்சாலையில் நின்று பயணிகளை ஏற்றிசெல்கின்றன. இதனால் மெயின் ரோட்டிலும் நான்கு வழிச்சாலையிலும் பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் இங்கும் அங்கும் அலைந்து திரியும் நிலை உள்ளது.
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைத்து தருவதன் மூலம் அனைத்து பஸ்களும் ஓரிடத்தில் வரும். இதனால் பயணிகளும் அங்கும் இங்கும் அலையாமல் தாங்கள் செல்ல விரும்பிய ஊருக்கு எளிதாக செல்ல முடியும்.
இதை நீண்ட நாட்களாக பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே இனியும் காலம் தாழ்த்தாது உரிய இடத்தை தேர்வு செய்து புதிய ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.