/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை
/
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை
ADDED : அக் 31, 2025 01:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:  சிவகாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. ஈஞ்சார்,  நடுவப்பட்டி,  வடபட்டி, திருத்தங்கல் சிவகாசி, ரிசர்வ்லைன் ஆகிய இடங்களில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜ., மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.,  கோபால்சாமி தலைமை வகித்து மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். மாவட்டத் தலைவர் சரவண துரைராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் கிரி ஜனகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், நகரத் தலைவர் முருகேசன், நகர பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன், கட்சியினர் கலந்து கொண்டனர்.

