/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புதிய அரசு மருத்துவக்கல்லுாரிகளில் தீக்காய சிகிச்சைக்கு டாக்டர்கள் இல்லை நோயாளிகள் பரிதவிப்பு

ADDED : டிச 13, 2024 03:11 AM
விருதுநகர்:புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை.
திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்பட 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன. 12ல் துவங்கப்பட்டது. இங்கு தீக்காய சிகிச்சை பிரிவுக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை நிரந்தர டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.
மேலும் மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் தீக்காயத்திற்கு சிகிச்சை பெறுபவர்கள் மேல் சிகிச்சைக்காக புதிய மருத்துவக்கல்லுாரிக்கு மாற்றப்படுகின்றனர். ஆனால் உள், வெளி நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை டாக்டர்கள் மருத்துவம் பார்க்கும் நிலையே தொடர்கிறது. மாற்றுப் பணியாக வரும் தீக்காய சிகிச்சை மருத்துவர்கள் நிலையாக இருப்பதில்லை.
இதனால் மருத்துவக்கல்லுாரியாக இருந்தும் பிற மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். எனவே புதிய அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.