/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிதி ஒதுக்கியும் பணி துவங்காததால் பரிதாபம்; சேதமான கட்டடத்தில் நோயாளிகள்
/
நிதி ஒதுக்கியும் பணி துவங்காததால் பரிதாபம்; சேதமான கட்டடத்தில் நோயாளிகள்
நிதி ஒதுக்கியும் பணி துவங்காததால் பரிதாபம்; சேதமான கட்டடத்தில் நோயாளிகள்
நிதி ஒதுக்கியும் பணி துவங்காததால் பரிதாபம்; சேதமான கட்டடத்தில் நோயாளிகள்
UPDATED : டிச 12, 2025 07:55 AM
ADDED : டிச 12, 2025 05:57 AM

அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் உள்ளது அரசு மருத்துவமனை. தேசிய தரச் சான்று பெற்றது. சில ஆண்டு களுக்கு முன்பு இது தரம் உயர்த்தப்பட்டு, மாவட்ட தலைமை மருத்துவமனை ஆனது.
இங்கு தரமான சிகிச்சைகள் செய்யப்படுவதால் வெளி மாவட்டங்களில் இருந்து கூட மக்கள் இங்கு வந்து செல்வர். கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் வருவதால் இந்த மருத்துவமனையை தேடி வருவர். மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்தும் போதுமான வசதிகள் இல்லை.
உள் கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனையின் பிரதான கட்டிடம், மருந்து கிடங்கு, சித்தா பிரிவு உள்ளிட்ட கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், பல பகுதிகள் சேதமடைந்தும், காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியில் நீட்டி கொண்டுள்ளது.
மார்ச்சுவரி கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து தற்போது தற்காலிகமாக இயங்கி வருகிறது. கட்டடங்களில் மராமத்து பணிகள் செய்ய மாவட்ட மருத்துவ நிர்வாகத் தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு ஒரு கோடியே 40 லட்சம் நிதியை மராமத்து பணிகள், வெள்ளை அடித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கியது. நிதி ஒதுக்கப்பட்டும் ஒரு மாத காலமாக பணியை துவங்குவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கட்டடங்களின் பல பகுதிகளில் மழை நீர் ஒழுகுகிறது.
ஏற்கனவே 3 ஆண்டு களாக 6 மாடிகள் கொண்ட கூடுதல் கட்டும் பணியும் மெத்தனமாக நடந்து வருகிறது. விரைவில் கட்டடங்களை மராமத்து பணிகள் துவங்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காளிராஜ், மாவட்ட மருத்துவமனை பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு): அரசு மராமத்து பணிகள் செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கி உள்ளது. பொதுப்பணித்துறை டெண்டர் விட்டு அதன் பின் பணிகள் துவங்கும். நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கூறி விட்டோம். விரைவில் பணிகள் நடக்கும், என்றார்.

