/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்யும் அல்லம்பட்டி ரோடுகள்; மக்கள் பரிதவிப்பு
/
வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்யும் அல்லம்பட்டி ரோடுகள்; மக்கள் பரிதவிப்பு
வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்யும் அல்லம்பட்டி ரோடுகள்; மக்கள் பரிதவிப்பு
வாகன ஓட்டிகளை திக்குமுக்காட செய்யும் அல்லம்பட்டி ரோடுகள்; மக்கள் பரிதவிப்பு
UPDATED : டிச 12, 2025 07:55 AM
ADDED : டிச 12, 2025 05:54 AM

விருதுநகர்: விருதுநகர் வாகன ஓட்டி களை திக்குமுக்காட செய்வதால் அல்லம்பட்டி ரோடுகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பாதாள சாக்கடைக்காக தோண்டியதில் சேதமான பள்ளங்களால் தடுமாறுகின்றனர்.
விருதுநகர் அல்லம்பட்டி ரோடுகள் நகரின் மேற்குப்பகுதியில் தொழிற்சாலைகள், பருப்பு மில்கள், வத்தல் கமிஷன் கடைகள் ஏராளம் உள்ளன. இதற்காக லாரிகள் நிறைய வந்து செல்கின்றன. இவை தவிர முத்துராமன்பட்டி, அல்லம்பட்டியில் குடி யிருப்புகள் ஏராளம் உள்ளன.
இங்கு தினசரி ஆயிரக் கணக்கான மக்கள் அல்லம்பட்டி ரோடுகளை பயன் படுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மேன் ஹோல்கள் எதுவுமே சம தளத்தில் இல்லை. மேடாக வும், பள்ளமாகவும் உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் ஏறி, இறங்கி அவை மிக மோசமான நிலையில் உள்ளன.
இவை நாளடைவில் சேதமாகின்றன. நகராட்சி யின் தோல்வியடைந்த பாதாளசாக்கடை திட்டத்தால் இந்த ரோடுகள் அடிக்கடி தோண்டப்பட்டுள்ளன. மேலும் மேன்ஹோல் லீக்கேஜ்ஜால் அவற்றை தோண்டும் போதும் பள்ள மாகின்றன. இவற்றை சரி செய்தாலும், பள்ளம் அப்படியே தான் உள்ளது.
மேலும் ரோடு முழு வதும் மண்மேவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. மழை நின்று வெயில் அதிகரிக்கும் போது புகைமாசு போல் மண் பரவுகிறது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கனரக வாகனங் களுக்கு பின் வரும் டூவீலர் வாகன ஒட்டிகள் கண்களில் துாசு பட்டு தடுமாறுகின்றனர்.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக பேட்ஜ் பணிகளை செய்ய வேண்டும். அதற்கு பின் புதிய ரோடு போட வேண்டும். மேன்ஹோல்களை உயர்த்தியதோடு விட்டு விடாமல், அவற்றை ரோடு மட்டத்திற்கு சமன்படுத்த வேண்டும்.
கனரக வாகனங்கள் வந்து செல்வதால் அதற்கேற்ப தரமான முறையில் அமைக்க வேண்டும். எனவே நகராட்சி நிர் வாகம் அல்லம்பட்டி ரோடுகளை சீரமைக்க வேண்டும்.

