/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு ஆர்.எம்.ஓ., நிர்வாக பணிகள் பாதிப்பால் நோயாளிகள் அவதி
/
அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு ஆர்.எம்.ஓ., நிர்வாக பணிகள் பாதிப்பால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு ஆர்.எம்.ஓ., நிர்வாக பணிகள் பாதிப்பால் நோயாளிகள் அவதி
அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு ஆர்.எம்.ஓ., நிர்வாக பணிகள் பாதிப்பால் நோயாளிகள் அவதி
ADDED : செப் 25, 2025 04:51 AM
விருதுநகர், : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நிலைய மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ.,) பணியிடம் ஓராண்டாக காலியாக உள்ளது. மாதம் ஒரு ஆர்.எம்.ஓ., என பொறுப்பு பார்ப்பதால் நிர்வாகப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் ஓராண்டாக ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாக உள்ளது. அரசு மருத்துவமனையின் அன்றாட நடவடிக்கைகள், வளாகத்தின் கண்காணிப்பு, மருந்து, மாத்திரை தட்டுப்பாடு இன்றி கிடைத்தல், உள்நோயாளிகளுக்கு வழங்கும் உணவின் தரம் பரிசோதித்தல் உள்பட ஆகியன ஆர்.எம்.ஓ.,வின் பணியாகும்.
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 2024 ஜூன் மாதம் ஆர்.எம்.ஓ., ஆக இருந்த முருகேசன் பணி ஓய்வு பெற, அதற்கு பின் நிரப்பப்படவில்லை.
அரசு மருத்துவமனைகளுக்கான ஆர்.எம்.ஓ., உதவி ஆர்.எம்.ஓ., பணியிட கலந்தாய்வு 2025 ஜூலை 30ல் நடந்தது. இதில் விருதுநகர் அரசு மருத்துவமனையை யாரும் தேர்வு செய்யாததால் அடுத்தாண்டு மீண்டும் கலந்தாய்வு நடக்கும் வரை ஆர்.எம்.ஓ., பணியிடம் காலியாகவே இருக்கும் நிலை உண்டாகியுள்ளது.
தற்போது மருத்துவமனை நிர்வாகத்தால் மாதம் ஒரு பொறுப்பு ஆர்.எம்.ஓ., நியமிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இரு அமைச்சர்கள் இருந்தும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஒரு நிரந்தர ஆர்.எம்.ஓ., பணியிடத்தை கூட நிரப்ப முடியாத நிலையே உள்ளது.
இதனால் மருத்துவமனையில் கழிவறை, குளியலறையில் முறையான பராமரிப்பு பணிகள் இல்லாமை, வார்டுகளில் கிழிந்து, துாசி படர்ந்த மெத்தைகள், ஆர்.ஓ., குடிநீர் மிஷின்கள் சுத்தமின்மை உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனை பாதுகாக்கக்கூடிய ஆர்.எம்.ஓ., பணியிடத்தை உடனடியாக நிரப்ப மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.