/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை இடத்தில் செயல்படும் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி
/
எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை இடத்தில் செயல்படும் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி
எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை இடத்தில் செயல்படும் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி
எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை இடத்தில் செயல்படும் குப்பை கிடங்கு துர்நாற்றத்தால் நோயாளிகள் அவதி
ADDED : ஏப் 06, 2025 08:08 AM

விருதுநகர : விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனைக்கான இடத்திற்கு அருகே தகர செட்டில் குப்பை கிடங்கு செயல்படுகிறது. இதில் இருந்து வரும் துர்நாற்றத்தால் பரிசோதனைக்காக காத்திருப்பவர்கள் அவதிப்படுவது தொடர் கதையாக மாறியுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு வரும் உள், வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவு ஆவதால் பலரும் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனை வார்டுகள், வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு, ஆய்வகங்கள், மகப்பேறு பிரிவுகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் வளாகத்தில் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்யும் இடங்களுக்கு அருகே உள்ள தகர செட்டில் சேமித்து வைக்கப்படுகிறது.
இப்படி சேகரிக்கப்படும் குப்பை மாதக்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. இது போன்று மாதக்கணக்கில் சேகரித்த குப்பையை சுத்தம் செய்யும் போது பணியாளர்களுக்கு பல்வேறு உடல்நிலை கோளாறுகள் ஏற்படுகிறது.
இங்கிருந்து குப்பையை ஒவ்வொரு முறை சுத்தம் செய்யும் போது துர்நாற்றம் வீசுகிறது. இந்த இடத்திற்கு அருகே எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., பரிசோதனை செய்வதற்காக காத்திருக்கும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மருத்துவமனையில் குப்பை கிடங்கு பிரச்னை கடந்த நான்கு ஆண்டுகளாக தீராத ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு முறையும் துர்நாற்றம் தாங்க முடியாமல் புகார்கள் எழும் போது எல்லாம் இடத்தை மாற்றுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
எனவே விருதுநகர் அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவுகளில் சேகரிக்கப்படும் குப்பையை தினமும் முழுமையாக அகற்றி வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் குப்பை கிடங்கு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.