/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாறுகால் முறையாக அமைக்காததால் பேவர் பிளாக் பதித்த வேகத்தில் அகற்றம்
/
வாறுகால் முறையாக அமைக்காததால் பேவர் பிளாக் பதித்த வேகத்தில் அகற்றம்
வாறுகால் முறையாக அமைக்காததால் பேவர் பிளாக் பதித்த வேகத்தில் அகற்றம்
வாறுகால் முறையாக அமைக்காததால் பேவர் பிளாக் பதித்த வேகத்தில் அகற்றம்
ADDED : மார் 18, 2025 06:40 AM

தளவாய்புரம்: செட்டியார்பட்டி பேரூராட்சியில் கழிவுநீர் வெளியேற வழி இன்றி சாலையில் பதித்த பேவர் பிளாக் கல்லை மீண்டும் அகற்றி எடுத்துள்ளனர். முறையற்ற பணிகளால் தாமதமாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செட்டியார்பட்டி பேரூராட்சி 11-வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் நாயுடு தெற்கு பகுதி ஏழு தெருக்களில் 2023ல் புதிதாக வாறுகால் அமைக்க ரூ. 87 லட்சம் ஒதுக்கப்பட்டது. பணிகள் முறையாக அமைக்காததால் பல இடங்களில் சேதம் அடைந்து இதுகுறித்து படத்துடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி பராமரிப்பு பணி நடந்தது.
இப்பகுதி தெருக்கள் மற்றும் 6,12 வார்டுகளுக்கும் சேர்த்து பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.1 கோடி 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பேவர் பிளாக் கல் பதிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் வழிந்தோட வழியில்லாதது குறித்து தனி நபர் பிரச்சனை செய்ததால் பதித்த இடத்திலிருந்து பேவர் பிளாக் திரும்ப அகற்றி வைத்துள்ளனர்.
முருகேஸ்வரி, 11 வார்டு கவுன்சிலர்: முறையான திட்டமிடல் இன்றி தரமற்று வாறுகால் அமைக்கப்பட்டதால் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதில் பேவர் பிளாக் சாலையும் அமைத்ததற்கு எதிர்ப்பினால் உயரம் குறைவாக மாற்றி அமைக்க வேண்டி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எவ்வித கருத்தும் கேட்காமல் நடக்கும் பணிகளால் மக்களை எதிர்கொள்ள முடியவில்லை. பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
முருகன், பேரூராட்சி பொறியாளர்: பணிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. தாழ்வான பகுதியில் வேறு பாதையில் கழிவு நீரை மாற்றி அமைக்க பேவர் பிளாக் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்படும்.