ADDED : ஜன 08, 2024 06:14 AM
விருதுநகர் : விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் காந்தி நகர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பாதியில் விடப்பட்ட பேவர் பிளாக் கற்கள் ரோடு தினமலர்செய்தி எதிரொலியால் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளது.
ரோசல் பட்டி ஊராட்சியில் காந்திநகரின் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் பேவர் பிளாக் கற்கள் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த ரோட்டை தெருவின் துவக்கத்தில் சிறிது துாரம், தெருவின் கடைசியில் சிறிது துாரம் மட்டுமே அமைத்தனர். நடுப்பகுதியில் அமைக்கவில்லை. இதனால் அப்பகுதியினர் அந்த இடத்தில் மண் கொட்டி சமப்படுத்தி ரோட்டை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து தினமலர் நாளிதழின் சூப்பர் ரிப்போர்ட்டர் பகுதியில் டிச. 11ல் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் பணிகளை துவக்கி, விடுப்பட்ட இடங்களில் பேவர் பிளாக் கற்களால் ரோடு அமைத்து பணிகளை முழுமை செய்துள்ளனர்.