நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: தமிழக காங்., மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., வுமான இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்குப் அனைத்து கட்சி சார்பில் இரங்கல் பேரணி நடந்தது.
சாந்தி தியேட்டர் முன்பு துவங்கி ஜவஹர் மைதானத்தில் பேரணி முடிந்தது. காங்., மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகர் செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மார்க்சிஸ்ட் நகர செயலாளர் சுப்பிரமணியன், இ.கம்யூ., நகர செயலாளர் விஜயன், ம.தி.மு.க., நகர் செயலாளர் மதியழகன், அ.தி.மு.க., சார்பில் யோகசேகரன் உள்பட காங்., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காங்., நகர் தலைவர் சங்கம் கணேஷ் செய்திருந்தார்.

