/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் மாணவர் சேர்க்கை பணிகள்
/
கிடப்பில் மாணவர் சேர்க்கை பணிகள்
ADDED : மார் 17, 2024 11:56 PM
காரியாபட்டி : காரியாபட்டியில் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் விழிப்புணர்வு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மாவட்ட தொடக்க கல்வித்துறை சார்பாக, காரியாபட்டி பகுதியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறது.
காரியாபட்டி பகுதியில் உள்ள துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், ஊர்வலங்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் எந்த ஊரிலும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நடத்தும் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இத்திட்டத்தை கிடப்பில் போட்டனர். விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

