தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்


UPDATED : ஆக 07, 2026 05:17 PM

ADDED : ஆக 07, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2026 05:17 PM ADDED : ஆக 07, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மத்திய அரசு தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்தினால், அதே அளவு தொகையை மத்திய அரசும் இணைப் பங்களிப்பாக வழங்கும். இதன் மூலம் 60 வயதை நிறைவு செய்த பின் மாதந்தோறும் ரூ.3000 உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படும்.

சுற்றுலா வழிகாட்டிகள், ஒருங்கிணைப்பாளர்கள், வாகன டிரைவர்கள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி, விருந்தோம்பல் துறை பணியாளர்கள், துப்புரவு, ஓட்டல் ஊழியர்கள், கைவினைக் கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிற சேவை வழங்கும் 18 முதல் 40 வயதுக்குட்பட்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

விவரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், அறை எண்.522, 5-வது தளம், புதிய கலெக்டர் அலுவலகம் அல்லது 73977 15688 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us