ADDED : டிச 23, 2024 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ராஜபாளையத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஓய்வூதியர் தினம் நடந்தது.
மாவட்டத் தலைவர் முகமது அலிபாத் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சுவிசேஷமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் சஞ்சீவி, வட்டக்கிளை இணைச் செயலாளர் ஆறுமுக பெருமாள், ஜான்சி ராணி, செல்வராஜ், பிச்சை உள்பட பலர் பங்கேற்றனர். இதில் புதிதாக மாவட்ட துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சந்தானலட்சுமி நன்றி கூறினார்.